Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை

வணக்கம் நண்பர்களே,
       ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தமிழக அரசு. 

     அதன்  பிறகு தேர்வு முடிந்த பின்பு அளிக்கபட்டது என காரணம் காட்டி 5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இறுப்பினும் இவை தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவற்றில் நாம் எந்த கருத்தும் கூற இயலாது நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இருப்பினும் சில அடிப்படை ஆதரங்களுடன் கூடிய விவதம் மற்றும் பேச்சு சுகந்திரத்தின் அடிப்பையில் கருத்துக்களை வெளியிடலாம்.

    5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் அளிக்கப்பட்டது தவறு கிடையாது ஆனால் இடையில் அளிக்கப்பட்டது தான் தவறு என நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு 110 விதியின் கீழ் கொண்டுவந்தவை அவை அரசின் கொள்கை என அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கும் எனவே பெரும்பாலும் அரசின் முடிவுகளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கீழ் நீதிமன்றங்களில் ஏற்காத பல அரசின் முடிவுகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது என்பதற்கு பல ஆதரங்கள் உள்ளது. எனவே 5% மதிப்பெண் தளர்வு இனி வரும் தேர்வுகளில் கட்டாயம் இருக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

   பாண்டிச்சேரி மாநிலம் தமிழ்நாடு அரசின் கல்வியை பின்பற்றியது அதே போல் ஆசிரியர் தகுதி தேர்வையும் பின்பற்றியது. நம் தமிழ்நாட்டில் 5% மதிப்பெண் தளர்வு அகற்றப்பட்டபோது அங்கும் நம்மை பின்பற்றுவதால் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டது சிலர் சென்னை உயர்  நீதிமன்றத்தை நாடி சென்று பண்டிச்சேரி மாநிலத்தில் பணியிடங்களை நிரப்பக்கூடாது 5% மதிப்பெண் தளர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை வாங்கினர்.

    பாண்டிச்சேரி மாநிலம் பிறகு மத்திய அரசின் கல்வியை (CBSE) பின்பற்றியது அதன்பிறகு அங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை பின்பற்றியது அதில் தேர்ச்சி பெறும் மதிப்பெண்னிலும் மாற்றம் கொண்டு வந்து 18tt' March,2Ol5 அன்று G. O. Ms. No. 76 என்ற ஒரு புதிய அரசானை ஒன்று வெளியானது அதில்


The Director of school Bducation has further proposed
qualifying marks in CTET for various categories as follows:

Sl.No       Category                       Qualifying marks
1          General Category             6O% ( 90 marks)
2          Most Backward Class      55% (82 marks)
3          Extreme Backward Class 55% (82 marks)
4          Other Backward Class      55% (82 marks)
5          Backward Class Muslim   55% (82 marks)
6          Scheduled Caste                5O% (75 marks)
7          Backward Tribe                5O% (75 marks)
8          Differently- abled persons50% (75marks)

என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது
                                                                         -இரா.கார்த்திக், B.Lit.,D.T.Ed.,COPA., (Gurukulam)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive