தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால்
மாணவர்கள்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று
வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க,
உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு
புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பாடத்தில் மட்டும் சில
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் புத்தகத்தில் இந்த கல்வி
ஆண்டு முதல்வினாக்கள் பகுதியில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்தின் கடைசியிலும், பயிற்சி வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.
பொதுத்தேர்வில், இவற்றிலிருந்தே பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படும்.
அதனால் இந்த ஆண்டு முதல் பாடத்தின் கடைசியாக இடம் பெறும் வினாக்கள்
பகுதியில் கூடுதலாக கேள்விகள் கேட்கப்பட்டு அறிவியல் புத்தகம்
அச்சிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அறிவியல் பட்டதாரி ஆசிரியரிடம் கேட்டபோது,
‘கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இரு மடங்கு, ‘புக் பேக்’ வினாக்கள்
அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஐந்து மதிப்பெண் வினா, 25ல் இருந்து, 108
ஆக உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...