Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய தமிழகம்கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி.,MD.,MLA அழைப்பு..!

       ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு உரிய இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலை வெளியிடாத தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
 
      ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண்.6 ன் படி அறிவித்த அனைத்து துறைசார்ந்த பள்ளிகளுக்குரிய ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டு பணி நியமனம்செய்த தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஒடுக்கப்பட்டமக்களின் குழந்தைகள் பயிலும் இந்த ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் நிரப்பவேண்டிய ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடாதது சற்று வருத்தம் அளிக்கிறது.ஒரு சிலரால் தொடுக்கப்பட்ட வழக்கை காரணம் காட்டி தேர்வு பட்டியலைவெளியிட மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைவழங்கிய இடைக்கால தீர்ப்பின் படி ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளுக்கான (468 Sc &Sca) ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடாததின் காரணம் புரியாத புதிராகவேஉள்ளது. ஆகவே விரைவில் ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடவில்லை எனில் இந்தஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியை வஞ்சிக்கும் தமிழக அரசின் கீழ் இயங்கும்ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர் பெருமக்களை ஒன்றிணைத்து சென்னையில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
மேலும் வழக்கில் இடைக்கால தீர்ப்பாக 70% பணியிடங்களுக்கு மட்டுமே தடையாணைவிலக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 30% பணியிடங்களும் ஆதிதிராவிட சமூகத்திற்கேகிடைக்க உரிய முயற்சிகளை மேற்கொண்டு வழக்கினை விரைந்து முடிக்கவும் அரசு உரியஆவன செய்யவேண்டும்.இந்த பணிக்காக நாமும் பல்வேறு கட்ட இன்னல்களை கடந்து விடாமுயற்சியால் பெற்றஇந்த தீர்ப்பினை செயல்படுத்தாத தேர்வு வாரியத்தின் மீது அதிருப்தியும்,அவநம்பிக்கையும் ஏற்படுத்துகிறது.
ஆசிரியர் சொந்தங்களே தனியே போராடிய நமக்கு தற்பொழுது கைகொடுக்க பலர் முன்வந்துள்ளனர். அவர்களோடு நாமும் போராடி நமது பணியை நமதாக்குவோம். ஆசியர் தேர்வு வாரியம் விரைவில் பட்டியலை வெளியிடவில்லையெனில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டத்திற்கு தயாராகுவோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive