கடந்த கல்வியாண்டு எல்லோருக்கும் நல்விதமாக அமைந்ததை வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. அத்தேர்ச்சி முடிவுகள் மாணவர்களின்
எதிர்காலத்தை சிறப்பானதாக ஆக்கவும், பெற்றோரின் கனவுகளை நனவாக்கவும் வழிவகுத்ததென்றால், அதற்கு பாடசாலை.நெட் இணையதளமும் ஒரு காரணம்.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், முந்தைய ஆண்டு பொதுத் தேர்வு வினாக்கள் என அனைத்தையும் ஒரு சேர கிடைக்க வழிவகை செய்து, மாணவர்களின் கற்றலை எளிமையாக்க பெரிதும் துணைபுரிந்தது பாடசாலை.நெட் தளம்.
கடந்த ஆண்டு பாடசாலை.நெட் எடுத்த தனித்துவமான முயற்சியான சென்டம் கோச்சிங் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் பெரும் வரவேற்பையும் மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. தாங்கள் எனக்கு அளித்த வாய்ப்பினால், எனது தயாரிப்பினாலான பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தாள்கள் பாடசாலை.நெட் இணையதளத்தில் இடம்பெற்ற நாள் முதல் தேர்வு நாட்கள் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தாள்களை அனுப்பியிருந்தனர். அவர்களது தாள்கள் உடனடியாக திருத்தப்பட்டதுடன், அதிக மதிப்பெண் பெற மாண்வர்களுக்கு உடன் அனுப்பிவைக்கப்பட்டன.
அரசு பள்ளி ஆசிரியர்களின் அரிய முயற்சியால் பல அரசுப்பள்ளிகள் இந்த முயற்சியில் பங்கேற்றது பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது. அதே போல் தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டு இதில் பங்கேற்றனர்.
தேர்ச்சி முடிவு வெளியான நாளும் அதற்கு அடுத்த நாளும் சென்டம் கோச்சிங் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களது பிள்ளைகளின் மதிப்பெண்களை கூறி அதற்கு பாடசாலை.நெட் இணையதளமும், ஆசிரியர்களாகிய உங்கள் முயற்சியும் தான் எனக்கூறியது பெரும் மகிழ்ச்சியை தந்தது. பள்ளியைத் தாண்டி பலதரப்பட்ட மாணவர்களை இம்முயற்சி சென்றடைந்து வெற்றி பெற்றிருக்கிறது. இது எதிர்வரும் கல்வியாண்டுகளிலும் தொடர வாழ்த்துகிறேன்.
நன்றி
ச.கோபிநாத்
பட்டதாரி ஆசிரியர்-ஆங்கிலம்
சேலம்
Arasu palli maanavargal Hindi English saralamaaga Eazhudavum padikavum theariyaveandum... Adhu dhaan unmaiyaana valarchi...
ReplyDeleteI suggest best tnpsc coaching center in chennai
ReplyDelete