Home »
» பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து மக்கள் முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக செய்தி மற்றும் சிறப்பு
செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகரில் லட்சுமி அரங்கத்தில் மாநில அளவில் பகுதி நேர ஆசிரியர்கள்
கூட்டமைப்பின் சார்பில் அரசுக்கு நன்றி நவிழ்தல் கூட்டம் சனிக்கிழமை
நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள்
கூட்டமைப்பின் மாநில தலைவர் எம்.ராஜா தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட
தலைவர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகம்
முழுவதும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான கல்வியை அளிக்கும்
வகையில் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு
மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது,
மக்கள் முதல்வரின் நடவடிக்கையால் நிகழாண்டு முதல் ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தி
ரூ.7 ஆயிரமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு, நிலுவைத் தொகையான ரூ.12
ஆயிரமும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பகுதி நேர
ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து மக்கள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து
சென்று பணி வரன்முறை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர்
தெரிவித்தார்.
இதில் நிறைவாக பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில்
ரூ.5 ஆயிரத்திலிருந்து, ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கவும், நிலுவை தொகை
ரூ.12 ஆயிரத்தை உடனே வழங்கவும் உத்தரவிட்ட மக்கள் முதல்வருக்கு நன்றி
தெரிவித்தும், கருணை உள்ளத்தோடு பரிசீலனை செய்து பணிவரன் முறை செய்யவும்
வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இக்கூட்டத்தில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பகுதி நேர
ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பகுதி
நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.
அரசுக்கு எப்போதும் உறுந்துணையாக இருப்போம். நன்றியுடன்
ReplyDelete