தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள எஸ்டேட் பகுதி முழுவதிலும்
இன்று முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தில்லியில் ராஷ்ட்ரபதி
பவன் வளாகத்தில் 330 ஏக்கர்கள் பரப்பளவில் எஸ்டேட் பகுதி உள்ளது.
இந்த பகுதிகள் முழுவதும் இன்று முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட
உள்ளது.இந்த வைஃபை வசதியின் மூலம் அப்பகுதியில் உள்ள 5 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் தடையில்லா இணையதள
வசதியை பெறுவார்கள். இந்த இணையதள வசதிக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது.தொடக்கத்தில் 24 வைஃபை
ஹாட்ஸ்பாட்டுகளும், 30 வைஃபை அக்ஸஸ் பாயிண்டுகளும் அமைக்கப்படவுள்ளது. இந்த
இணையதள சேவையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய தொலைதொடர்பு
துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...