கேரளாவில் சட்டத் தேர்வில் காப்பி அடித்ததாக போலீஸ் ஐ.ஜி. டி.ஜே. ஜோஷ் சிக்கினார்.
கேரள
மாநிலம் திருச்சூர் ஐ.ஜி.,யாக இருப்பவர் ஜோஸ். அங்குள்ள மகாத்மா காந்தி
பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு (எல்.எல்.எம்.,) படித்து வந்தார். கொச்சி
கலமச்சேரியிலுள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் கிரைம் 2ம் தாள் தேர்வெழுதிய
ஜோஸ், பிட் அடித்ததை தேர்வறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். இதுகுறித்து
கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் அளித்தார். கேரள ஐ.ஜி., ஒருவர் தேர்வில்
பிட் அடித்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ்
ஐ.ஜி., ஒருவர் தேர்வில் பிட் அடித்து மாட்டிக் கொண்ட சம்பவம்
கேரளாவுக்கும், கேரள போலீசுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என அம்மாநில
உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். மேலும், ஜோஸ் கட்டாய
விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...