பொதுவாக, மெக்கானிக்கல், சிவில், EEE., ECE., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்
போன்ற பிரிவுகளே, மாணவர்களுக்கு மிகவும் தெரிந்த பிரிவுகள். இது தவிர பல
பிரிவுகள் உள்ளன. அதேசமயத்தில், நாம் எந்தக் கல்லூரியில் சேர்கிறோம்
என்பதும் மிக முக்கியம். முன்னணி நிறுவனங்கள், நேர்முகத் தேர்விற்கு வரும்
கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.
மாணவர்கள் தனக்கு விருப்பமுள்ள படிப்பை தேர்ந்தெடுப்பது
நல்லது. ஒரு மாணவர், அடிப்படை பொறியியலுக்கும், பொறியியல்
பயன்பாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும். சிவில், கெமிக்கல்,
மெக்கானிக்கல் போன்ற அடிப்படை அறிவியல் இன்ஜினியரிங் படிப்புகளில்,
அறிவியலின் அடிப்படை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், அட்வான்ஸ்டு படிப்புகளில், பொறியியலின் பயன்பாட்டிற்கு
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, மாணவர்கள், தங்களின் ஆர்வம்
மற்றும் திறனை அறிந்து, அதற்கேற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...