தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்
எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகளை அந்த வாரியம் வியாழக்கிழமை
வெளியிட்டது.வினா - முக்கிய விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் முறையிடலாம்
எனவும் அந்த தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி
ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை சில மாதங்களுக்கு முன்பு
அறிவித்தது.
இதில் 20 சதவீதம் பணியிடங்களில் அத்துறையைச்
சேர்ந்தவர்களையே தேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளதாகவும் அந்த தேர்வு
வாரியம் கூறியது.இந்தத் தேர்வில் பங்கேற்க 1.65 லட்சம் பேர்
விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வின் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வும்,
பின்னர் உடல் தகுதித் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்த முடிவு
செய்யப்பட்டது.இதில் பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கு எழுத்து தேர்வு கடந்த
23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
சென்னையில் 22 தேர்வு மையங்களில் இளைஞர்கள் தேர்வு எழுதினர். இந்தத்
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், சுமார் 80 சதவீதம் பேர் எழுதியதாக அந்தத்
தேர்வு வாரியம் கூறியது. இதேபோல காவல்துறை ஒதுக்கீட்டுதாரர்களுக்கு
எழுத்துத் தேர்வு கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது.
முக்கிய விடைகள் வெளியீடு:
இந்நிலையில் இரு தேர்வுகளுக்குரிய முக்கிய விடைகளைஅந்த வாரியம், தனது இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டது. முக்கிய விடைகளை,தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.தேர்வில் கேட்கப்பட்ட வினா, முக்கிய விடைகளில் ஏதேனும் தவறு அல்லது மாறுபாடு இருப்பின் தேர்வர்கள் முறையீடு செய்யலாம் என தேர்வு வாரியம் கூறியுள்ளது. முறையீட்டினை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தகுந்த ஆதாரங்கள் இல்லாத முறையீடு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும்,வினா - முக்கிய விடைகள் தொடர்பான முறையீட்டினை தேர்வு வாரிய அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ usrb91@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ ஜூன் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...