தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் விரும்பிய
படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ.,
மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கல்லூரி களில் விரும்பிய
பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தாண்டு 65 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் மே 20 முதல் 25க்குள்
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியாகி அரசு, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளின் பாடப்
பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சேர்க்கை துவங்கி
விட்டது. இதனால் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில்
இடம் கிடைக்குமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த நெருக்கடி ஏற்படுகிறது.
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் இல்லை. தமிழகத்தில்
முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால் இப்பிரிவு
மாணவர்களுக்கு முக்கிய கலை, அறிவியில் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை
ஏற்படுகிறது. இதுகுறித்து அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கடிதம்
எழுதியுள்ளோம். இப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை தேதி மே 29 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை உட்பட சில நகரங்களில் சி.பி.எஸ்.இ., முடிவு
வெளியாவதற்குள் கல்லூரிகளில் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். இது
குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...