பணியிடை நீக்கம் தண்டனை அல்ல. ஓய்வுக்கு ஒரு நாளுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு குடிமைப்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரிந்தவர் முருகன். இவர்ஏப்.1-ம் தேதி ஓய்வுபெற இருந்தார். இவரை மார்ச் 30-ம் தேதி பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
பணியிடை நீக்கம் என்பது தண்டனையல்ல. அது ஒரு இடைக்கால நடவ டிக்கை மட்டுமே.மேலும் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் ஒருவரை பணியிடை நீக்கம் செய்யக்கூடாதுஎன எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. மனுதாரரின் மனுவை அனு மதித்தால், பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் ஊழல் செய்து விட்டு பணியிடை நீக்கம்செய்ய முடியாது என பலர் நீதிமன்றத் துக்கு வருவர். மேலும், பணியிடை நீக்கம் செய்ய மண்டல மேலா ளருக்கு அதிகாரம் உண்டு. மனுதாரருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு ள்ளது. அவற்றின் மீது ஒரு ஆண்டுக்குள் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...