நாகையை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை
சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சர்மிளா (வயது 38). இவர் நாகையில் உள்ள அரசு
பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று பணி முடிந்து மோட்டார்
சைக்கிளில் நாலுகால் மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் காளிதாஸ்
திடீரென சர்மிளாவின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, கீழே தள்ளி
தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த வழியே சென்ற பொதுமக்கள் பெண்ணை
தாக்கிய போலீஸ்காரர் காளிதாசிடம் வாக்குவாதம் செய்து தாக்கினர். இதனால்
அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நாகை டவுன் போலீஸ்
இன்ஸ்பெக்டர் முத்துசாமி, வெளிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும்
சமாதானப்படுத்தினர். மேலும், அங்கு பொதுமக்கள் கூடியதால் அவர்களை போலீசார்
கலைந்து செல்லுமாறு கூறியபோது, பொதுமக்கள் ஆவேசத்துடன் போலீசாரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சர்மிளா நாகை டவுன் போலீசில்
புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் காளிதாஸ் நாகை அரசு
மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Police meedhu nadavadickai veandum...
ReplyDeleteDear Viewers
ReplyDelete1) As a teacher, she has to cope with the rules of Safety and Traffic signs.
2) As a Police-man, he has to charge with a fine admissible for this offence.
Hence, both are punishable. Moreover, the teacher has to be punished as she violated the traffic rules, whereas the police man has to be punished due to his manhandling and pushing her with a vehicle, causing physical damage.
- A Social Reformer