மத்திய அரசு ஊழியர்கள்
தங்களின் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.இது
குறித்து மத்தியபணியாளர் நலன் பயிற்சிகள் துறை அமைச்சகம் அரசின் பல்வேறு துறைகளுக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஊழியர்கள், அதி்காரிகள் தங்கள்
கையிருப்பு , வங்கியிருப்பு , பத்திரங்கள்,கடன்பத்திரங்கள், பங்குகள், முதலீடுகள் ஆகியவை
குறித்து விரைவில தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதிக்குள்
தாக்கல் செய்யாத ஊழியர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள்ளும், 2015-ம் ஆண்டிற்கான கணக்குகளை
வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில்
லோக்பால் சட்டப்படி அவை ஊழலில் சேர்த்த சொத்தாக கருதப்படு்ம் என தெரிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ்.
ஐ.பி.எஸ்.ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தங்களின் சொத்து கணக்கை தாக்கல் செய்வது குறித்த கடிதங்கள்
மாநில தலைமைச்செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Dear Publishers
ReplyDeleteThis information is pertaining to Central Govt. Bureaucrats. This news can be seen in all Daily News Papers. Such information may be avoided for publishing here, so as to occupy sufficient space in Padasalai Website, and screen the message exclusively for Teachers and School Education Dept. Kindly take this suggestion as a friendly request to limit the publication from General to Specific. This practice avoids occupying more space from unwanted news and messages in the Padasalai Website.. Kindly ensure implementing this practice from 01-05-2015
- A Friend