Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆய்வக உதவியாளர் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி

       அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். நேற்று மாலை வரை,  தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இன்றே கடைசி நாள் என்பதால், கடந்த இரு தினங்களாக, தேர்வுத் துறை சேவை மையங்களில், கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.
 
       ஆங்காங்கே போலீசார் உதவியுடன் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், சேவை மையங்கbளுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ஒழுங்கு படுத்தப்படுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், டோக்கனை பலர் விற்றதால், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகலில், 'சீல்' வைத்து டோக்கனாக வழங்கப்பட்டது.

கூட்டத்தை சமாளிக்கவும், விண்ணப்பிக்க விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், இன்று மாலை வரை, அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்று விண்ணப்பம் பெற்றவர்கள் கூட்ட நெருக்கடியால், இன்று மாலைக்குள் பதிய முடியாவிட்டால், அவர்கள் நாளைக்கும் சேவை மையத்துக்கு வந்து, புகைப்படம் எடுத்துப் பதிவு செய்யலாம்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, வேலைவாய்ப்பு பதிவு எண், அட்டை நகல் வேண்டும் என்பதால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியாதவர்களும், அட்டையை புதுப்பிக்காதவர்களும், நேற்று ஒரே நாளில் வேலைவாய்ப்பு புதுப்பிப்பு பணியை, 'ஆன்லைனில்' மேற்கொண்டனர். இதனால், சர்வரில் கோளாறு ஏற்பட்டு, இணையதளம் முடங்கியது.

இதையடுத்து, வேலைவாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பிப்பு அவசரமாக செய்ய வேண்டியதில்லை; புதுப்பிக்காதவர்களும், பதியாதவர்களும் முதலில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பின், பதிவு அல்லது புதுப்பிப்பு செய்து அதன் விவரங்களை எழுத்துத் தேர்வுக்கு பின் தாக்கல் செய்யலாம் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இதனால், 10ம் வகுப்பு முடித்த அனைவரும், வேலைவாய்ப்புக்கு காத்திருக்காமல் விண்ணப்பிக்க வாய்ப்பு  அளிக்கப்பட்டு உள்ளது




3 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive