தமிழக ஆசிரியர் கூட்டணி
சார்பில் நேற்று டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சுமார் 600 ஆசிரியர்கள் பங்கேற்ற போராட்டத்துக்கு அகில இந்திய ஆசிரியர்கள்
சங்க கூட்டமைப்பின் செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
மாநில தலைவர்
வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர் கோ.முருகேசன், பொருளாளர் நம்பீசன்
ஆகியோர் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் டி.ராஜா,
சி.பி.நாராயணன்(கேரளா) ஆகியோர் ஆதரித்து பேசினார்கள்.
மத்திய அரசின் கல்வி
நிதியை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்
அமல்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு அறிக்கையை வெளியிட்டு 2014 ஏப்ரல்
முதல் அமல்படுத்த வேண்டும், தொடக்க கல்வியில் தாய்மொழி மட்டுமே
பயிற்றுமொழியாக உறுதி செய்ய வேண்டும், வருமான வரிவிலக்கு உச்சவரம்பை ரூ.5
லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
இந்த போராட்டம் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...