Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலை, அறிவியல், அக்கவுன்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு உயர்வு: இன்ஜினியரிங், மருத்துவ படிப்புக்கு இணையாக அதிகரிப்பு

         பி.இ., - பி.டெக்., மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு ஈடாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகள் இந்த ஆண்டு முன்னணிக்கு வந்துள்ளன. இதற்கான கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற அளவுக்கு, மாணவ, மாணவியரின் கவனம் புதிய திசை நோக்கி திரும்பியுள்ளது.

          தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. வழக்கத்துக்கு மாறாக, மாநிலத்தில் முதல் இடத்தை பொருளியல் மாணவியர் பிடித்து உள்ளனர். மாநில அளவிலும் பொருளியல் மற்றும் கணிதப் பதிவியல் மாணவ, மாணவியர் முக்கிய இடம் பிடித்துள்ளனர். இதனால், கணினி அறிவியல், கணிதம், அறிவியல் பிரிவு ஆகியவற்றுக்கு ஈடாக, மற்ற பிரிவுகளில் மாணவ, மாணவியர் கவனம் திரும்பியுள்ளது.

'கட் - ஆப்' உயரும்:


இந்த ஆண்டு கணிதத்தில், 9,710 பேர், 'சென்டம்' எடுத்துள்ளனர். இதனால், பி.இ., 'கட் - ஆப்' உயரும் என, கூறப்படுகிறது. மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' சிறிது குறையும் என்றாலும், போட்டி அதிகமாக உள்ளது. இந்நிலையில், நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர், இந்த ஆண்டு பி.இ.,க்கு மட்டுமின்றி, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் முக்கியத்துவம் தந்துள்ளனர். குறிப்பாக, சி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., - பி.பி.ஏ., - பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்ப விற்பனை நாளுக்கு நாள் உயர்கிறது. பி.காம்., - பி.எஸ்சி., போன்ற படிப்புகளில் சேர்க்க, மாணவ, மாணவியரின் பெற்றோர், சிபாரிசு தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வியாளரும், பிரபல ஆடிட்டருமான சேகர் கூறியதாவது: நிதி நிர்வாகம் இல்லாமல் எந்தத் துறையும் இல்லை. வட மாநிலங்களான பஞ்சாப், டில்லி, உ.பி., மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில், பி.இ., கல்லூரிகளை விட, சி.ஏ., மற்றும் பொருளாதார படிப்பு நிறுவனங்கள் தான் பிரபலம்.

நல்ல விழிப்புணர்வு:


தற்போது தென் மாநிலங்களில், அதிலும் தமிழகத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தற்போது, அக்கவுன்ட்ஸ் பாடங்களான பி.காம்., பைனான்ஸ் மேனேஜ்மென்ட், பி.ஏ., பேங்கிங் அண்டு இன்சூரன்ஸ், பி.ஏ., கார்ப்பரேட்ஷிப் போன்ற பல படிப்புகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது; இது நல்ல துவக்கம். இளங்கலை முடித்து, முதுநிலை, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., - ஏ.சி.எஸ்., போன்ற படிப்புகள் படிக்கலாம். பிளஸ் 2 முடித்தும், சி.ஏ., நேரடியாகத் தேர்வு எழுதிப் படிக்கலாம். டிசம்பர் தேர்வுக்கான பதிவு தற்போது நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

கலை, அறிவியல் படிப்புகள் குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா கூறியதாவது:
கேம்பஸ் முகாம்:


எம்.பி.ஏ., படிக்க நினைப்போர், பி.பி.ஏ., படிப்பில் தற்போதே சேரலாம். பி.சி.ஏ.,வுக்கு அதிக மாணவர்கள் செல்கின்றனர். விஷுவல் கம்யூனிகேஷன், கார்ப்பரேட் செகரட்ரிஷிப், பி.ஏ., ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவுகளை, அதிக மாணவர்கள் தேர்ந்து எடுக்கின்றனர். பி.ஏ., ஆங்கிலம் முடித்தவர்களை, பி.பி.ஓ., நிறுவனத்தினர் கேம்பஸ் முகாம் நடத்தி, வேலைவாய்ப்பு தருகின்றனர். பி.ஏ., தமிழ் முடித்து கணினி தொடர்பையும் அதிகரித்தால், ஊடகம் மற்றும் கணினியில் தமிழ் வடிவமைப்பு பணிகள் அதிகம் உள்ளது. அறிவியல் பிரிவில், தற்போது ஆசிரியப் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சிக்காக அதிக பட்டதாரிகள் தேவைப்படுவதால், கலை, அறிவியல் படிப்புகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. வேளாண் படிப்புக்கு,' சீட்' கிடைப்பதும் அரிதாகி விட்டது. வேளாண் பல்கலையில், பி.டெக்., - அக்ரி., - ஐ.டி., உணவு பதப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கும் அதிகம் பேர் விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

7 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள்:


* தமிழகத்தில், எட்டு அரசு பல்கலைக் கழகங்கள்; 1,400 கல்லூரிகள் உள்ளன. இதில், 110 அரசு கல்லூரிகள், 162 அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் மற்றும் 1,300 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. பல்கலைக் கழகங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில், 23 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் பல படிப்புகளில், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
* கலைப்படிப்பில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், உருது மொழிப் படிப்புகள், வரலாறு, புவி புள்ளியியல், இந்திய பாரம்பரியம், சுற்றுலா, புள்ளியியல், அரசியல் அறிவியல், கூட்டுறவு, இன்டீரியர் டிசைன், எலக்ட்ரானிக் மீடியா இன்பர்மேஷன், பி.காம்., மற்றும் அக்கவுன்டன்சி வகையில், பொருளியல், வணிகவியல், கார்ப்பரேட் செகரட்ரிஷிப், வங்கி மேலாண்மை, காப்பீடு நிர்வாகம், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற படிப்புகள் உள்ளன.
* அறிவியல் வகையில், பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்றவை மட்டுமின்றி, அதன் உள்படிப்புகள் அணு இயற்பியல், பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, எலக்ட்ரானிக் சயின்ஸ், நாட்டிக்கல் சயின்ஸ், நியூட்ரீஷியன் புட் சர்வீஸ், இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட், ஓட்டல் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகள் உள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive