Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும்

    பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்களது இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
        உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.
போக்குவரத்துத் துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித் துறை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சனிக்கிழமை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்:- அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், குறும்படங்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் போக்குவரத்துத் துறை, காவல் துறை உயர் அதிகாரிகளைப் பங்கேற்கச் செய்து பெற்றோர்களுக்கு படிக்கட்டு பயணம் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
போக்குவரத்து காவல்துறையால் பேருந்துகளில் படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்கள் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டால், இது தொடர்பாக மாணவரை பள்ளி நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்.
மேலும், அதே மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்வதாகத் தகவல் பெற்றால், அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து அவர்களின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
பேருந்து படிக்கட்டு பயணத்தால் உண்டாகும் விபத்து, அதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள், பெற்றோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் இலவசப் பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என்பதையும், மேலும் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.
பேருந்து தினம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் இது போன்ற நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 Comments:

  1. ஐயா நல்ல ஐடியா ..பள்ளியின் வெளி நிகழ்வுக்கு இத்தகு நடவடிக்கை சரி எனது சந்தேகம் 1 ) பள்ளி பாட வேளையில் வேண்டுமென்றே வெளியே சுற்றி திரியும் மாணவர்கும் 2)ஆசிரியர்களை கேளி செய்யவோ அல்லது மிரட்டவோ செய்யும் மாணவர்க்கும் 3) ஆசிரியர் காரணம் கேட்டாலோ அல்லது சிறிது அறிவுரை தந்தாலும்  அவர்களையே மாணவர்கள் அடிக்கின்றனறே அவ்வாறான ஒழுங்கில்லா மாணவர்கும் 4)தவறே செய்தாலும் தன்பில்லை யோக்கியன் என வாதாடும் பெற்றோர் கும் 5) படிப்பில் கவனமின்றி பிற மாணவ மாணவியரை உடல் மற்றூம் மன ரீதியாக ' துன்புறுத்தும் சில மாணவர் கும் 6) தவறுசெய்த பிறகு சிபாரிசுக்கு ஊர் பெரியோர் அரசியல் செய்வோரை அழைத்து வந்து மிரட்டுவேnர்கும் 7) பள்ளியின் சொத்தை சேதமோ அல்லது அழிக்கவோ செய்யும் மாணவர் கும் 8) ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்காத or இடையூறு செய்கின்ற or வகுப்பிற்கு வராது திரிகின்ற ஆசிரியர் சொல் கேளாதோர் கும் 10) பள்ளிக்கு உள்ளேயும் வெளிேயயும் ரவுடிசம் செய்யும் மாணவர்களுக் கும் 11) தன் விருப்பப் பட்ட உடையில் சிகை அலங்காரத்தில் நேரத்தில் எந்த கட்டுப்பாo மின்றி வருேவார்கும் ..இன்னும் பிற .. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஏதேனும் தன்டனை யோ or வழிகாட்டலோ உள்ளதா? நிச்சயம் இல்லை .. ஆசிரியர் மாணவர் நலனுக்காக சிறிது தண்டிப்பது குற்றமாம் தண்டிக்கதக்க தாம் ..ஆனால் மாணவர் ஆசிரியர்களை அடிக்கலாம். திட்டலாம் ஏன் என்ன வேண்டுமானாலும் செய்யலn ம் அதை அவன் அறியாமல் செய்திருப்பானம் பாவமாம்....ஆசிரியர் உதவியின்றி வேறெந்த துறையின் அலுவலரையோ அதி காரியையோ பெற முடியுமா என்றால் முடியாது அனைத்து I துறைகளுக்கும் தாய் துறை கல்வி துறை தான்.. ஆனால் அனைவரும் அதை மறந்து விட்டனர் மேலும் சொன்னால் காவலர்கள் கூட தவறு நடந்த பின்னர் தான் ஆராய்ந்து குற்றந் தை கண்டறிந்து தண்டனை வழங்க முடியும் ஆனால் ஆசிரியரால் மட்டுமே குற்றம் நடப்பதற்கு முன்னரே கண்டறிந்து அல்லது நuந்தாலோ சிறு அ றிவுரை or தண்டனை மூலம் நல்வழி படுத்த முடியும்... எனவே அடக்கம், பணிவு, குரு பக்தி நேரம் தவறா மை . ஒழுக்கம் போன்ற குனம் இல்லாதவர் வாழ்வில் ஒரு நாளும் உயர்ந்த தாய் சரித்திரம் இல்லை உயரப் போவதும் இல்லை... பள்ளியில் ஆசான் மூலம் கற்காத நற்பண்பை வேறுயார் தான் சொல்லி தருவார்கள் ? எனவே மாணவர்களுக்கு ஒழுக்க கட்டுப்பாடு நிச்சயம் இருக்க வேண்டும்... விதிக்க வேண்டும் ...அன்னையின் தண்டனை என்றும் குடிந்தையை மன உளைச்சளுக்கு ஆளாக்காது அது அவர்களின் நன்மைக்கே வழி வகுக்கும்.... திறமையான ஆராக்யமான சமுதாயம் உண்டாக வேண்டுமெனில் மாணவர்களுக்கு ஒழுக்க கட்டுப்பாடு, பணிவு, தர்ம சிந்தனை, குருபக்தி நிச்சயம் மீண்டும் விதைக்கப்பட வேண்டும் பின்னர் படிப்பு தானாகவே வரும்..... நன்றி

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive