மத்திய பல்கலையில், மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வான, 'க்யூசெட்'
தேர்வுக்கு விண்ணப்பம் அளிக்க, நாளை கடைசி நாள். பொது நுழைவுத் தேர்வு
ஜூன், 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம், கேரளா, ஜார்க்கண்ட், கர்நாடகா
உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும், எட்டு மத்திய பல்கலை.,களுடன் இணைந்து,
இந்த நுழைவுத்தேர்வு நடக்கிறது.
பிளஸ் 2 முடித்தவர்கள் ஒருங்கிணைந்த, ஐந்து ஆண்டு முதுகலை படிப்பான,
எம்.எஸ்சி., இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை
அறிவியல் பிரிவுகளிலும், இளநிலை பட்டம் முடித்தோர், முதுகலை ஆங்கிலம்,
செம்மொழித் தமிழ், இந்தி, சமூகப் பணி, ஊடகம் மற்றும் தொடர்பியல்
பாடப்பிரிவுகளில் சேரலாம்.
நடப்பாண்டில், எம்.டெக்., படிப்பில் மெட்டீரியல் சயின்ஸ், நானோ டெக்னாலஜி,
எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பப் படிப்புகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருவாரூர்
உட்பட, நாடு முழுவதும், 39 மையங்களில் தேர்வு நடக்கும். இதற்கான 'ஆன் -
லைன்' விண்ணப்பம் ஏப்ரல், 6ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்க,
நாளை கடைசி நாள். நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன், 20ம் தேதி வெளியாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...