அரசின் பல்வேறு சான்றுகளை அளிக்கும் பொது சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை
(மே 17) செயல்படும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொது
சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட
முக்கிய அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம்மூலம்
நடத்தப்படுகிறது.இந்த மையங்கள் அரசு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை (மே
17) செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு அலுவலக நேரமான காலை
10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையங்கள் செயல்படும் எனவும், ஜாதிச்
சான்றிதழ், ஆண்டு வருமானச் சான்று உள்பட அனைத்து வகையான
சான்றிதழ்களுக்கும்இந்த மையங்களுக்குச் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்
எனவும் அரசு கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...