முடிவு அறிவிக்கப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., சிறப்பு வகுப்புகள் துவங்கி நடக்க உள்ளது.
தனியார்
பள்ளிகளுக்கு இணையாக ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் தேர்ச்சி விகிதம் பெற
வேண்டும். மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில்,
கடந்த சில ஆண்டுகளாகவே அரசு, நகரவை, நிதியுதவி பள்ளிகள் பல்வேறு வழிமுறைகளை
கையாண்டு வருகிறது.
காலாண்டு,
அரையாண்டு தேர்வு விடுமுறைகளில் மட்டுமின்றி ப்ளஸ் ஒன், ஒன்பதாம் வகுப்பு
தேர்வு முடிந்தவுடன், ரிஸல்ட் வெளியிட்டு உடனடியாக அடுத்தாண்டுக்கான
பாடங்களை துவக்கி நடத்துகின்றனர். முதல் நான்கு அல்லது ஐந்து
மாதங்களுக்குள் பாட திட்டத்தை முடித்து தினமும் தேர்வு எழுத செய்கின்றனர்.
மாணவ, மாணவிகள்
எந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர் என்பதை கவனித்து அதிக
மதிப்பெண் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கின்றனர்.
ப்ளஸ் ஒன்
தேர்வு முடிந்த நிலையில் ரிஸல்ட் உடனடியாக வெளியிடப்பட்டது. மாவட்டத்தில்
மேல்நிலை வகுப்பில் ஈரோடு கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 36, நகரவை
பள்ளிகள் மூன்று, நிதியுதவி பள்ளிகள் எட்டு, கோபி கல்வி மாவட்டத்தில் அரசு
பள்ளிகள் 48, அரசு மாதிரி பள்ளிகள் நான்கு, நகரவை பள்ளிகள் மூன்று,
நிதியுதவி பள்ளிகள் ஒன்பது உள்ளன.
இவற்றில் கல்வி
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே ப்ளஸ் டூ பாடத்துக்கான நோட்டு,
புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வழக்கம்போல் சிறப்பு வகுப்புகள்
நடைபெற்று வருகிறது. மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டு, அதிக மதிப்பெண்
பெற வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல்
எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பை பொறுத்தவரை, ஈரோடு கல்வி மாவட்டத்தில் அரசு
பள்ளிகள் 55, அரசு மாதிரி பள்ளிகள் ஒன்று, நகரவை பள்ளிகள் நான்கு,
நிதியுதவி பள்ளிகள் 16, கோபி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 101, அரசு
மாதிரி பள்ளிகள் ஐந்து, நகரவை பள்ளிகள் ஐந்து, நிதியுதவி பள்ளிகள் 14
உள்ளன.
ஒன்பதாம்
வகுப்பு ரிஸல்ட் வெளியிடாத நிலையில் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கான பாட
புத்தகங்கள் வினியோகிக்கப்படவில்லை. ரிஸல்ட் வெளியான பின் புத்தகங்கள்
வழங்கப்பட உள்ளது. இன்று(4ம் தேதி) ரிஸல்ட் வெளியிடப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறியதாவது: ப்ளஸ் டூ பாட புத்தகம் வழங்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது.
ஒன்பதாம் வகுப்பு ரிஸல்ட் வெளியான பின்னரே எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கான பாட புத்தகங்கள் வினியோகிக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அளவு பாட புத்தகங்கள் சென்று விட்டன. பாட புத்தகம் வினியோகிக்கப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., சிறப்பு வகுப்புகள் துவங்கி நடைபெறும் என்றார்.
ஒன்பதாம் வகுப்பு ரிஸல்ட் வெளியான பின்னரே எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கான பாட புத்தகங்கள் வினியோகிக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அளவு பாட புத்தகங்கள் சென்று விட்டன. பாட புத்தகம் வினியோகிக்கப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., சிறப்பு வகுப்புகள் துவங்கி நடைபெறும் என்றார்.
Pesama nammalum matric matiri 9thla 10thum 11 la 12 lesson nadathalamey? By a gov't schooll tr.erukura class hrsa effective va class aleduthaley podum.no extra classes required
ReplyDeleteI support this above
ReplyDeletecomment
சிறப்புப் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் t.a.da,மற்றும் 30 நாட்களுக்கு ஈட்டிய விடுப்பு ஆகியவற்றையும் வழங்க வேண்டும் .வழங்குவாரா ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர்.?
ReplyDeleteகொளுத்தும் வெய்யிலில் ஒரு கொடுமை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete