பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம், பள்ளிகளில், வேலைவாய்ப்புக்கு
பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு கல்லுாரிகளில்
வழங்கப்படும் தற்காலிக பட்டப் படிப்பு சான்றிதழ் போல், பிளஸ் 2
மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பள்ளிக்கல்வித் துறை
அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், மாற்றுச் சான்றிதழும் நேற்று
பள்ளிகளில் வழங்கப்பட்டன. தற்காலிக சான்றிதழில், மாணவரின் பெயர், பிறந்த
தேதி, புகைப்படம், தேர்வுப் பதிவு எண், பயிற்று மொழி, பள்ளியின் பெயர்,
பாடப்பிரிவின் பெயர், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின்
தனித்தனி மதிப்பெண் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சான்றிதழ் எண் பதிவிட வேண்டிய இடத்தில், 'டி.எம்.ஆர்., கோட்' எனப்படும்,
மதிப்பெண் பதிவேடு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த சான்றிதழ்
மூலம், சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில்
பதிவு செய்ய முடியவில்லை.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வேலைவாய்ப்பு பதிவுக்கு
சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை பதிவு செய்யும் போதோ அல்லது அவரது படிப்பை,
'அப்டேட்' செய்யும்போதோ, மதிப்பெண் சான்றிதழ் எண்ணை, 'ஆன் - லைனில்'
கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், 'டி.எம்.ஆர்., கோட்' எண் மட்டுமே
உள்ளது; சான்றிதழ் எண் இல்லை. அதனால், அசல் மதிப்பெண் சான்றிதழ் எண் வந்த
பின், வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...