விரைவில் 885 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிக்கு பணிமாறுதல் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,”
என அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர்
ராஜ்குமார் தெரிவித்தார்.மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று
திண்டுக்கல்லில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் வாசுதேவன், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் அபிராமி, மாவட்ட தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் காசிபாண்டியன் துவக்கி வைத்தார்.
ராஜ்குமார் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் 500 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளுக்கு பணிமாறுதல் செய்ய வேண்டுமென அரசாணை உள்ளது. இரண்டு ஆண்டுகளாக 885 பயிற்றுனர்களை பள்ளிக்கு பணிமாறுதல் செய்யவில்லை. இப்பிரச்னையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லாததால் உண்ணாவிரதம் இருக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிய கூடாது என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
ஏற்கனவே பணிபுரியும் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தியபின்பே புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறுவள மையத்திற்கு ஒரு பயிற்றுனர், வட்டார வளமையத்திற்கு 5 பயிற்றுனர்கள், ஒரு மேற்பார்வையாளர் என்ற பழைய நடைமுறையில் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி, நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் கோரிக்கை நிறைவேறாவிட்டால், செயற்குழுவை கூட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும், என்றார். மாவட்ட பொருளாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...