மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுயவேலைவாய்ப்புக்கான சான்றிதழ் பயிற்சி
வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
மதுரை காமராசர் பல்கலைக்கழக, வயது வந்தோர் தொடர்கல்வி,
விரிவாக்கப்பணித்துறையில் படித்த வேலைவாய்ப்பற்ற மாணவ, மாணவிகளுக்கு சுய
வேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சிக்கான சேர்க்கை மே 6 முதல் தொடங்க உள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேறியவர்கள் (அ) தவறியவர்களுக்கு "ரெஃப்ரிஜிரேசன்-ஏர்
கண்டிசனிங்', "எலக்ட்ரீசியன்', "எலக்ட்ரிகல் - எலக்ட்ரானிக்ஸ்' உள்ளிட்ட
பிரிவுகளுக்கு ஓராண்டுக்கான செய்முறை பயிற்சிகள் அளிக்கபட உள்ளது.
இதன்மூலம், சுய தொழில் தொடங்குவதற்கும், தொழில்நுட்பப் பணியில் சேரவும்,
வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. மேலும், பயிற்சி தொடர்பான
தகவலுக்கு 0452-2537838 என்ற தொலைபேசி எண்ணிலும், விண்ணப்பப் படிவங்களைப்
பெற மதுரை காமராசர் பல்கலைகழக அலுவலகத்தை நேரிலும் அணுகலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...