அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
விண்ணப்பம், வரும் 18ம் தேதி முதல், விற்பனை செய்யப்படும்' என,
அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 41 அரசு பாலிடெக்னிக்
கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு
ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறும்,
பகுதிநேர பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும் 18ம் தேதி முதல், அடுத்த மாதம், 5ம் தேதி வரை
விற்கப்படும்.விண்ணப்பத்தின் விலை, 150 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி.,
இனத்தவருக்கு, இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பத்தை,
www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள், அந்தந்த பாலிடெக்னிக்
கல்லுாரிகளுக்கு, அடுத்த மாதம், 5ம் தேதிக்குள் வந்தடைய வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...