ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் திரைப்பட பின்னணி பாடகி சுருதி 1,172
மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
முதல் இடம்
தமிழகத்தில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவி சுருதி 1,172 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதலிடம் பிடித்துள்ள மாணவி சுருதி திரைப்பட பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி சுருதி பெற்ற மதிப்பெண்கள் பாட வாரியாக வருமாறு:-
தமிழ்- 192, ஆங்கிலம்-186, கணினி அறிவியல்-196, பொருளியல்-198, வணிகவியல்-200, கணக்குப்பதிவியல்-200 மொத்தம்-1,172.
முழுமையாக படித்தேன்
மாணவி சுருதி கூறியதாவது:-
எனது தந்தை கோபி என்ற பாலநாராயணன் சென்னை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். எனது தாய் பானு. நாங்கள் ராமநாதபுரம் லட்சுமிபுரம் மேல்கரை பகுதியில் குடியிருந்து வருகிறோம். நான் மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், 1,180 மதிப்பெண்கள் எடுப்பேன் என்று எதிர்பார்த்தேன்.
எனக்கு என் பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் மிகவும் உறுதுணையாக இருந்தனர். தினமும் பள்ளியில் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே நன்றாக படித்தேன். கடந்த 5 ஆண்டுகளில் வெளியான கேள்வித்தாள்களை அடிப்படையாக கொண்டு முழுமையாக படித்ததால் அதிக மதிப்பெண் பெறமுடிந்தது.
சிறுவயது முதலே டி.வி. உள்ளிட்டவற்றில் நடைபெற்ற பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால் நான் 13 வயதிலேயே திரைப்படத்தில் பாட வாய்ப்பு பெற்றேன். இதுவரை மொத்தம் 10 படங்களில் பாடி உள்ளேன். எனக்கு பாடலில் அதிக விருப்பம் என்பதால் மருத்துவம், பொறியியல் தொடர்பான பாடங்களை எடுத்தால் அதில் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் வணிகவியல் பாடத்தை தேர்வு செய்தேன்.
தினத்தந்தி வினா-விடை
நான் பட்டய தணிக்கையாளர் படித்து வங்கியில் மிகப்பெரிய பதவியில் அமர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. தினத்தந்தியில் வெளிவந்த வினாவிடை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. குறிப்பாக சரியான விடையை தேர்வு செய்யும் கேள்விகளில் நான் அதிக மதிப்பெண் பெற்றதற்கு தினத்தந்திதான் காரணம். இதற்காக தினத்தந்திக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...