'அரசுப் பள்ளிகளில் 4,360 ஆய்வக உதவியாளர் நியமனத்தை சர்ச்சையின்றி,
நேர்மையாக நடத்த வேண்டும்' என முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை
நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது.
இதற்கான விண்ணப்ப வினியோகம் ஏப்.,24ல் துவங்கியது; விண்ணப்பிக்க, இன்று
கடைசி நாள்.பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு தேர்வு நடப்பதால்
விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.இதற்கிடையே, தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன்
வீட்டின் அருகிலேயே உள்ள பள்ளியில் பணி வாங்கித் தருவதாக, அரசியல்வாதிகள்
சிலர் வசூல் வேட்டையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கும் புகார் சென்றுள்ளது. 'இதனால் சர்ச்சை
இன்றி தேர்வு நடத்த வேண்டும்' என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டு உள்ளது.கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 150 ஒரு
மதிப்பெண் வினாக்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதில் 120
வினாக்கள் அறிவியல் பாடம்; 30 வினாக்கள் பொது அறிவு பகுதி யில் இருந்து
இடம் பெறும். தேர்வு பெறுவோரில் ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம்
நேர்முகத் தேர்விற்கு (25 மதிப்பெண்) அழைக்கப்படுவர்.வேலைவாய்ப்பக பதிவு
மூப்பிற்கு 10 மதிப்பெண், பிளஸ் 2 தேர்ச்சிக்கு 2, டிகிரிக்கு 3, பணி
அனுபவத்திற்கு 2, கேட்கப்படும் கேள்விகளுக்கு 8 என மதிப்பெண் வழங்கப்படும்.
இதில் சிபாரிசுக்கு இடம் தராமல் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து
பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற
வேண்டாம் என்றார்.
யார் அந்த உயர் அதிகாரி இவருக்கு எவ்வளவு கமிஷன் வரபோகிறது . மக்கள் என்ன முட்டாள்களா.யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?பழைய நடைமுறையில் பதிவு மூப்பு மூலம் நியமனம் செய்யுங்கள் .எந்த முறைகேடும் நடைபெறாது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதேர்வு வைத்து தான் வேலை தர வேண்டும்....!!!
ReplyDeleteவயதை மட்டும் அடிப்படையாக கொண்டு வேலை தருவதை தவிர்த்து ,திறமையை அடிப்படையாக கொண்டு வேலை தர அரசாங்கம் முடிவு செய்து இருப்பது வரவேற்க வேண்டிய அம்சம்...~!!!
அருண் குமார் நீங்கள் தேர்வு எழுதி வேலைக்கு சென்றதால் தேர்வு முறை நல்லது என்று நீங்கள் சொல்கிறீர்கள் .ஆனால் அதன் மூலம் 90 சதவீதம்பேர் . பணத்தின் மூலம் அந்த வேலையில் உள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா உண்மையை உணருங்கள் ....
Deleteஇல்லை ஐயா, தங்களின் கருத்தில் நான் மாறுபடுகிறேன்..!!
Deleteநாங்கள் 100 சதவீதம் நேர்மையான முறையில் பணிக்கு வந்து உள்ளோம்...
பணத்தின் மூலம் 90 சதவீதம் பேர்பணிக்கு வந்துள்ளதை தங்களால் இயன்றால் நிரூபிக்கவும்.....!!!??
தயவு செய்துதவறான கருத்துகளை(90 சதவீதம்பேர் . பணத்தின் மூலம் அந்த வேலையில் உள்ளார்கள்) தயவு செய்து பரப்பாதீர்கள்....!!
Deleteதேர்வு முறையை பற்றி ஆதாரம் இல்லாமல் பேசுவதால், சாதாரண மக்கள் தேர்வு முறையை பற்றி தவறாக எண்ணக் கூடும்.....!!
பணம் வாங்கி முடிந்து விட்டது, அவருக்கும் போக வேண்டிய share போய்விட்டது, அதனால் தான் கடைசி நாள் பேட்டி கொடுக்கிறார் போல. நீங்கள் நடத்தும் தேர்வு முறையே சந்தேககம் உள்ளது. PG trb க்கே நேர்முக தேர்வு இல்லை. ஆனால் இதற்க்கு மட்டும் எதற்க்கு . மிக குறுகிய நாட்களிள் தேர்வு நடப்பது ஏன்? படிப்பதற்கு கூட நேரம் கொடுக்காமல் அவசரமாக தேர்வு நடக்கிறது.
ReplyDeleteமுதல் நாளிலே இம்மாதிரி அறிவிப்பை வெளியிடாமல் , கண்களை கட்டி வித்தை காட்டுகிறார்கள் போலும்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete