நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது ஆயக்காரன்புலம் -3
.இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1992 முதல் செயல்பட்டு வருகிறது.
மேலும் அறிவியல்
சமூக அறிவியல்
கணிதம் ஆகிய பாடங்களில் பெருவாரியான அளவில் சதம்
அடித்து மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.
அறிவியல்
|
124
மாணவிகள் 100/100
|
சமூக
அறிவியல்
|
032
மாணவிகள் 100/100
|
கணிதம்
|
021
மாணவிகள் 100/100
|
இக்கிராமப்புறப்பள்ளியில் 09 மாணவிகள் மூன்று பாடங்களில் 100/100 பெற்றிருப்பது சாதனைக்குரிய செயலாகும்.
சென்ற ஆண்டில் அறிவியல் பாடத்தில் 96 பேர் 100/100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.இந்த ஆண்டு 124 மாணவிகள் இப்பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றிருப்பது சிறப்புக்குரியது. இது குறித்து இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திரு S.R செந்தில்குமார் கூறியதாவது
ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டுடன் கூடிய மாணவிகளின் கல்வி ஈடுபாடு
மிகமுக்கியக்காரணம்.
இப்பள்ளியில் சனி .ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்
நடைபெறும். இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர்
கழகமும் பாராட்டப்படவேண்டியவர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி முன்னேற்றத்தை மட்டுமே தன் சிந்தையில்கொண்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.மா.இராமகிருஷ்ணன்
அவர்களின் ஊக்கத்தாலும். பாரட்டினாலும் கிடைத்த வெற்றி இதுவாகும்.
எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் இப்படி ஒரு சாதனையா? பாராட்டுவோம். தொடருங்கள் உங்கள் சாதனையை. தலைமைஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ReplyDelete