தானே: பள்ளி குழந்தைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையை குறைப்பது
குறித்து மாநில அரசு பரிசீலித்து வரும் நிலையில் வரும் கல்வியாண்டில்
இருந்து முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் புத்தகப்
பையை அன்றாடம் சுமந்து வர வேண்டியதில்லை என்று தானே மாநகராட்சி
அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் புத்தகம் மற்றும் பிற பொருட்களை பள்ளிக்
கூடத்திலேயே விட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை தானே மாநகராட்சி செய்து
வருகிறது. தானே மாநகராட்சி துணை கமிஷனர் மணீஷ் ஜோஷி இது குறித்து
செய்தியாளர்களிடம் கூறுகையில், “வகுப்பறையில் ஒவ்வொரு மாணவருக்கும்
அவர்களுடைய டெஸ்க்கில் தனி லாக்கர் இருக்கும். புத்தகங்களை அதில் வைத்து
விட்டுச் செல்லலாம்.
எனவே அவர்கள் அன்றாடம் புத்தகங்களை பள்ளிக்கு சுமந்துவரத் தேவையில்லை” என்றார். தற்போது தானே மாநகராட்சிக்கு சொந்தமான 130 பிரைமரி மற்றும் 13 செகண்டரி பள்ளிகள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 7,000 மாணவர்கள் படிக்கிறார்கள். 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாநகராட்சி கல்வி அதிகாரி ரகுநாத் பெல்டர் இத்திட்டம் குறித்து கூறுகையில், “முதல் கட்டமாக கீழ்வகுப்புகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். அதாவது இந்த ஆண்டில் முதலாவது மற்றும் இரண்டாவது வகுப்புகளில் இத்திட்டத்தை அமல் செய்கிறோம்.
இந்த முயற்சி எந்த அளவில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்தும் தேவையான ஏற்பாடுகளை செய்த பிறகும் உயர் வகுப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும் குழந்தைகள் ஸ்கூல் பேக் இல்லாமலேயே பள்ளிக்கு வரலாம்” என்றார். இதற்கிடையே பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதிலாக டிஜிட்டல் போர்டுகளை வைக்கவும் சீனியர் மாணவர்களுக்கு டேப்ளெட் பி.சி.க்கள் வழங்கவும் தானே மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மேயர் சஞ்சய் மோரே தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...