குழந்தைகளின்
பாதுகாப்புக்காக மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்தின்
நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் "சைல்டு லைன்' இலவச தொலைபேசி (1098)
சேவை மையம் தொடக்க விழா சென்னை ஒக்கியம், துரைப்பாக்கத்தில் உள்ள எழில்
நகரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி புதிய சேவை மையத்தைத் தொடக்கி வைத்தார். இதுகுறித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் "செஸ்' தன்னார்வ அமைப்பின் தலைவர் டாக்டர் பி.மனோரமா கூறியதாவது:
குழந்தைகளுக்கு
ஏற்படக் கூடிய பாலியல் துன்புறுத்தல்கள், ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைத்
தொழிலாளர்கள், பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள்
உள்பட குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பிரச்னைகள் குறித்து 1098 என்ற இலவச
தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அதன்பேரில், தொடர்புடைய குழந்தைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் சைல்டு லைன்
ஃபவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகி அருண்மொழி, தமிழ்நாடு குடிசை மாற்று
வாரியத்தின் செயற்பொறியாளர் செல்வமணி, செஸ் தன்னார்வ அமைப்பின் திட்ட
மேலாளர் வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...