'அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ளதால், பகல் நேரத்தில், வெயிலில் செல்ல
வேண்டாம்; அதிகளவில், நீர் ஆகாரங்களை அருந்த வேண்டும்' என, டாக்டர்கள்
அறிவுரை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில், கோடைக் காலம் துவங்குவதற்கு முன், வெயில் தாக்கம் அதிகம்
இருந்தது. தற்போது, அதன் அளவு கூடியதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ளது. இனிமேல், வெப்பத்தின்
தாக்கம் உச்சகட்டத்தில் இருக்கும் என தெரிகிறது. இதனால், கோடைக் கால நோய்
பாதிப்பில் இருந்து தப்ப, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை அரசு மருத்துவமனை மருந்தியல் துறை தலைவர் ரகுநந்தன்
கூறியதாவது:வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால், உடலில் நீர்சத்து குறையும்;
நீர்சத்து குறைவால், ரத்தமும் சீரோட்டமாக இருக்காது. இதன் காரணமாக, தலைவலி,
வாந்தி ஏற்படும். சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்த அளவு குறையும்; இதனால்,
நீர் சுளுக்கு ஏற்படலாம்; சிறுநீரகத்தில் கல் தங்க வாய்ப்புள்ளது; இதுதவிர,
தசை வலி ஏற்படும். முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், அதிகளவில்
பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், வெயிலில் மோர், இளநீர், பழச்சாறு,
கஞ்சி ஆகியவற்றை, அடிக்கடி சாப்பிட வேண்டும்.
நீர்சத்து உள்ள...:
தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட நீர் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்
சாப்பிட வேண்டும். காலை 11:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, வெயிலில்
செல்ல வேண்டாம். கதர், பருத்தி ஆடை அணிய வேண்டும்; இறுக்கமான ஆடைகள் அணிவதை
தவிர்ப்பதுடன், அடிக்கடி குளிக்க வேண்டும். மாலையில், காற்றோட்டமான
இடங்களில், நடைபயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...