பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதம்
மற்றும் நுழைவுத்தேர்வு அனுமதி சீட்டை, 'ஆன் - லைனில்' அனுப்ப, அண்ணா
பல்கலை திட்டமிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், வரும், 6ம் தேதி
முதல், அண்ணா பல்கலை மற்றும் 59 மையங்களில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும்
கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதேபோல், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மற்றும்
கவுன்சிலிங் கடிதங்களும் தபால் மூலமே அனுப்பப்படும். ஆனால், தபாலில்
அனுப்புவதில் முகவரி மாற்றம், வீட்டில் ஆள் இல்லாமல் இருப்பது போன்ற பல
பிரச்னைகளால், கடிதங்கள் கிடைக்காமல், நகல் கேட்டு பல்கலைக்கு வருகின்றனர்.
இதனால் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு முதல், 'ஆன் -
லைன்' முறையை படிப்படியாக கொண்டு வர, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, முதுகலை படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு, 'ஆன் - லைன்'
மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டை,
'ஆன் - லைனில்' அனுப்ப, பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதேபோல்,
கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதத்தையும், 'ஆன் - லைனில்'
அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த முறை படிப்படியாக, இன்ஜினியரிங்
மாணவர்களுக்கும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொறியியல் கவுன்சிலிங்கை, இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை 1ம்
தேதி துவங்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. மேலும், கவுன்சிலிங்கை
வேகமாக முடித்து, ஜூலை 31க்குள் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை
நடவடிக்கையை முடிக்கவும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகளை துவங்கவும்
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...