சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு
முறைகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
l மாநில
கல்வித் துறையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இன்ஜினியரிங்,
மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கு,
மொழிப்பாடம் அல்லாத முக்கியப் பாடங்களின் மதிப்பெண் மட்டும், 'கட் - ஆப்'
மதிப்பெண்ணாகக் கணக்கிடப்படுகிறது.
l சமச்சீர்
கல்வி முடித்தவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கால்நடை
மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு, மூன்று பாடங்களின் மொத்த மதிப்பெண்ணை,
மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடுவர்.
l அதாவது,
இன்ஜினியரிங் படிப்புக்கு, கணிதத்தில், 200க்கு எடுக்கும் மதிப்பெண்ணை,
இரண்டால் வகுத்து, 100க்கு எவ்வளவு; இயற்பியல், வேதியியல் பாடங்களில்,
200க்கு எடுக்கும் மதிப்பெண்ணை, நான்கால் வகுத்து, ஒவ்வொரு பாடத்துக்கும்
தலா, 50 என, இரு பாடங்களுக்கும் மொத்தம், 100 மதிப்பெண்ணுக்கு, மதிப்பெண்கணக்கிடப்படுகிறது.
பின், மொத்தமாக கணிதத்தில், 100 மதிப்பெண்; இயற்பியல், 50; வேதியியல், 50 என, 200க்கு எவ்வளவு என, 'கட் - ஆப்' கணக்கிடப்படும்.
l சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, கணிதத்தில், 100க்கு எடுக்கும் மதிப்பெண்
அப்படியே எடுத்துக் கொள்ளப் படும்.
இயற்பியலில், 100; வேதியியலில், 100 மதிப்பெண்ணுக்கு எடுக்கும்
மதிப்பெண்ணை, தனித்தனியே, இரண்டால் வகுத்து, 50க்கு எவ்வளவு என,
கணக்கிடுவர்.
பின், கணிதத்தில் 100; இயற்பியல், 50; வேதியியல், 50, என, மொத்தம், 200 மதிப்பெண்ணுக்கு 'கட் - ஆப்' கணக்கிடப்படும்.
இத்தகவலை, அண்ணா பல்கலை பேராசிரியர், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
ரேண்டம் எண், தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு
போன்றவை, அனைத்து சமச்சீர் மற்றும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கும், 'கட் -
ஆப்' எண் வரிசைப்படியே தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை
நடத்தப்படும் என, அண்ணா பல்கலைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...