'அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி இருப்பது தொடர்பாக, பொதுமக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள
சுற்றறிக்கை:
* தமிழக அரசின், கல்வித்துறை சார்ந்த நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தி, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
* தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக, உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
* அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், உடனடியாக முதல் வகுப்பு மாணவர்
சேர்க்கையை துவங்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க
வேண்டும்.
* தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஊர்வலம் நடத்த வேண்டும்.
* அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி நடத்தப்படுகிறது என்பதை,
சுவரொட்டிகள் ஒட்டியும், ஊர்வலங்கள் நடத்தியும், பொதுமக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ok sir
ReplyDelete