ஜெயலலிதா விடுதலை; மேல்முறையீடு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும்
விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக
உயர் நீதிமன்றம் வந்தடைந்தார்.
அதிமுக தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், செந்தில், திமுக
பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், தாமரைச்
செல்வன் மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்களும்
வந்தனர். இதனிடையே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தனும் கர்நாடக
உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக
உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.
3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.இதையடுத்து ஜெயலலிதா வீட்டிற்கு சென்று பன்னீர் செல்வம் அவரை சந்தித்தார். முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய உள்ளார்.இந்நிலையில் ஜெயலலிதா வரும் 17ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது பூந்தோட்டம் அமைதியாக உள்ளது ....
ReplyDeleteநன்றி ....
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள
ReplyDeleteதீர்ப்பு சொன்னாரு ... !!!
ஆனா குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு ... !!!��������
நாமெல்லாம் இந்தியாவில் வாழ்வதற்கே வெட்கப்படவேண்டும் ..என்ன சட்டம் என்ன நீதி ...வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதி ... வெளங்கிடும் இந்த நாடும் .. இந்த ஊரும் ...
ReplyDelete