சில தவறு, குளறுபடி தவிர்த்து பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
2014-15ம்
கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் -லைனில் 'ரிசல்ட்'
பார்த்து மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். முன்கூட்டியே கல்லூரிகளில்
அட்மிஷன் துவங்க ஏதுவாக தற்காலிக மதிப்பெண், டி.சி.,வழங்க பள்ளிக்
கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மதிப்பெண் பட்டியல் அடங்கிய சான்றிதழை (புரோவிஷனல்) ஆன்-லைனில் 'பிரின்ட்
அவுட்' எடுத்து, தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டு வழங்க வேண்டும்.
மதிப்பெண் சான்றுடன் பள்ளி டி.சி.,யும் வழங்க வேண்டும். டி.சி.,யில்
'ஒரிஜினல்' மதிப்பெண் பட்டியல் சான்றை சரி பார்க்க வேண்டும் என்ற வாசகம் கட்டாயம்
இடம் பெறச் செய்ய வேண்டும் என, அறி வுறுத்தப்பட்டுள்ளது. இன்று
(மே14)முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தற்காலிக சான்று,
டி.சி.,களை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. உத்தரவு தகவல்
தலைமை ஆசிரியர்களுக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர்
கூறுகையில், " தற்காலிகமாக வழங்கும் மதிப்பெண், டி.சி.,யை பயன்படுத்தி
கல்லூரியில் சேரலாம்.6 மாதம் வரை பயன்படுத்தலாம். அதற்குள் ஒரிஜினல்
மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மேலும், மதிப்பெண்ணில் தவறு, குளறுபடி
இருந்தால் சரி செய்து, ஒரே சான்றாக வழங்குவதற்கு இப்புதிய முறை உதவும்,”
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...