தமிழகம் முழுவதும், நேற்று நடந்த எஸ்.ஐ., தேர்வில், பெரும்பாலான கேள்விகள், சட்டம், காவல் துறை சம்பந்தப்பட்டதாக இருந்தன. |
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பொது ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழகம் முழுவதும், 114 மையங்களில், நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. 8௫ சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று, 20 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில், காவல் துறையினர், அமைச்சு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. அதில், 13,059 பேர் தேர்வு எழுதினர். 170 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதில், 1 முதல் 30 வரை பொது அறிவு கேள்விகள், 31 முதல் 50 வரை உளவியல் கேள்விகள், 50 முதல் 170 வரை சட்டம் மற்றும் காவல்துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.
தேர்வு எழுதிய போலீசார் ஒருவர் கூறியதாவது:
பொதுஅறிவு கேள்வி அதிகம் கேட்கப்படும் என நினைத்து, முன் தயாரிப்பு செய்திருந்தோம். ஆனால், பெரும்பாலான கேள்விகள், நாங்கள் பணி புரியும் காவல் துறை, சட்டம் சம்பந்தப்பட்டதாக இருந்தன. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...