Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை

         தந்தையை இழந்தாலும் துவண்டுவிடாமல் படித்து, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.
        சைதாப்பேட்டையை சேர்ந்தவர்கள் பி. செந்தில்நாதன் - எஸ். ஆண்டாள் தம்பதி. இவர்களின் ஒரே மகள் செüமியா. ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் செந்தில்நாதன். 


சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தார் செளமியா. 2014-ஆம் ஆண்டு டிசம்பரில் திடீரென தந்தை செந்தில்நாதன் உயிரிழந்தார்.



குடும்பத் தலைவரின் திடீர் மரணம் பேரிடியாக இருந்தது. செந்தில் நாதனின் மாதச் சம்பளம்தான் அந்த குடும்பத்தின் ஒரே வருமானம். இந்த நிலையில், இனி வாழ்வில் என்ன செய்வது என்றே தெரியாமல் திக்கற்ற நிலையில் ஆண்டாளும், இன்னும் 4 மாதங்களில் வரப்போகும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த செüமியாவும் நிலைகுலைந்தனர்.

 
வருவாய் பாதிப்பால், செüமியாவின் படிப்பு இடையூறாக அமையும் என்ற நிலையில், உறவினர்களின் அரவணைப்பு தக்க நேரத்தில் கிடைத்தது.


தந்தையின் இழப்பைத் தாண்டி தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற செüமியாவின் உறுதி, பிளஸ் 2 தேர்வில் மாநகராட்சி அளவில் முதலிடம் பிடிக்க வைத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் அவர் பெற்ற 1,169 மதிப்பெண்கள்தான். மாநகராட்சி பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய 6,202 பேரைக் காட்டிலும் அதிகம்.


வணிகவியல், வணிக கணிதம் என இரு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றார் செüமியா. தமிழில் 189, ஆங்கிலத்தில் 190, பொருளாதாரத்தில் 194, கணக்குப் பதிவியலில் 196 என பிற பாடங்களிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


இந்த வெற்றி குறித்து செüமியா கூறியது: இந்த வெற்றிக்கு ஆசிரியர்கள், அம்மா, உறவினர்களே காரணம். அவர்கள் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது. தந்தையை இழந்து நின்ற போது, சுற்றியிருந்த அனைவரும் உதவிக் கரம் நீட்டினர். அடுத்து பட்டய கணக்காளர் (சி.ஏ.) படிக்க வேண்டும். கணக்குப் பதிவியலில் ஆர்வம் அதிகம். அதனால் சி.ஏ. படிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் செளமியா.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive