புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி ‛எஸ்பி இன் டச்’ என்ற
டெபிட் கார்டு, ‛எஸ்பிஐ சிக்னேச்சர்’ என்ற கிரெடிட் கார்டுகளை
அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
ஐஐடி தலைவர் (நிர்வாகம்) பேராசிரியர் பி.ஸ்ரீராம், பாரத ஸ்டேட் வங்கியின்
பொது மேலாளர் ஜி.ரீட்டா, ஐஐடி பதிவாளர் வி.ஜி.பூமா ஆகியோர் இக்கார்டுகளை
அறிமுகப்படுத்தினர்.
புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள
‛கான்டாக்ட்லஸ்’ கார்டுகளான இவற்றின் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில்
பணத்தைக் கையாள முடியும். குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள்,
பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் இக்கார்டுகளை அங்குள்ள தேய்க்கும்
(ஸ்வைப்பிங்) கருவிகளில் தேய்ப்பதற்கு பதிலாக அந்தக் கருவியின் மீது
காட்டினாலே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் விரைவாகவும்,
பாதுகாப்பாகவும் பணத்தைக் கையாள முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...