சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம்
ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர்,
விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. விண்ணப்பிக்க, வரும் 29ம்
தேதி கடைசி நாள். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், இந்த
படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.சி.,
பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வெளியாவதில் தாமதம் ஆகி
வருகிறது. இதனால், தாங்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுமோ என,
சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்து மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது:
முடிவுகள் தாமதம்:
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் தாமதம் ஏற்படுவதால், எந்த சிக்கலும் இல்லை.
வரும் 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; விண்ணப்பத்தை வாங்கி
வைத்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க, 29ம் தேதி வரை அவகாசம் உள்ளது; அதற்கு
முன், தேர்வு முடிவுகள் வந்து விடும்; மேலும், தாமதம் ஏற்படும் என்றால்,
மாற்றாக என்ன செய்வது என்பது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...