Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அசத்திய அரசுப் பள்ளி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டை வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியானது பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுகளில் இரண்டு வகுப்புகளிலும் 100% தேர்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
    இப்பள்ளியானது உயர்நிலைப் பள்ளியிலிருந்து         மேல்நிலைப் பள்ளியாக கடந்த 2013ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. முதல் முறையாக 12ம் வகுப்பு மாணவர்களைப் பொதுத் தேர்வுக்கு அனுப்பிய இப்பள்ளி முதல் முயற்சியிலேயே 100% தேர்ச்சியை அடைந்துள்ளது.
மேலும் இப்பள்ளியில் முதுகலையில் 8 ஆசிரியப் பணியிடங்களுக்கு வெறும் 3 முதுகலை ஆசிரியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு          ( 6 காலிப்பணியிடங்கள் )  இச்சாதனையை இப்பள்ளி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளோடு அரசுப் பள்ளிகளை ஒப்பிட்டு அரசு பள்ளிகளைத் தரக்குறைவாகப் பேசும் பல நண்பர்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் இப்படியொரு அரசுப் பள்ளியின் சாதனை “ கண்ணுக்குத் தெரியவில்லையா” ”இல்லை செவிக்குதான் எட்டவில்லையா”. நண்பர்களே! இதுபோன்று எத்தனையோ அரசுப் பள்ளிகள் சாதித்துக்காட்டியுள்ளன. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரசுப் பள்ளிகளையும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களையும் தரக்குறைவாகப் பேசாதீர்கள்.
அரசுப் பள்ளிகளில் 12ம் வகுப்பில் மாணவர்கள் 6 மாதங்களில் படித்து இத்தகைய சாதனைகளைப் படைக்கின்றனர். ஆனால் சில பள்ளிகளில் ………………………………………………………… ( புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே ). இனியும் அரசுப் பள்ளிகளைக் கேவலமாகப் பார்க்காதீர்கள். முடிந்தால் ஆதரவு அளியுங்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை வீசாதீர்கள். 100% தேர்ச்சி பெற்ற அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவண்
ப.இளையராஜா (Padasalai's Volunteer)
முதுகலை ஆசிரியர்
அ.மே.பள்ளி. தம்பிக்கோட்டை வடகாடு
தஞ்சாவூர் மாவட்டம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive