சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலருக்கு அனைத்து மாவட்ட சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் பி.வடிவேல்முருகன் நேற்று அனுப்பியுள்ள கடித விவரம்:மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வியளிக்க மறுவாழ்வு குழுமம் (ஆர்சிஐ) அங்கீகரித்துள்ள கல்வித் தகுதி பெற்ற சிறப்பாசிரியர்கள், அனைவருக்கும் கல்வி இயக் கத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். சிறப்பாசிரியர்கள் பல ஆண்டுகளாக இப்பணியை மட்டுமே நம்பியுள்ளனர். பணிப் பாதுகாப்பு, போதுமான ஊதியம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் நிலையை போலவே மிகவும் கஷ்ட த்தில் உள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் சிறப்பாசிரியர்கள் மட்டுமே இதுபோன்ற பரிதாப நிலையில் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஊதியம் இல்லாமல் கற்பித்தலுக்கு கட்டணம் பெறும் நிலைக்கு சிறப்பாசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக், அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பிஎட் பட்டதாரிகளுக்கு தனித்தேர்வு நடத்தப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். ஆனால் கல்வித்துறையில் பணிபுரியும் சிறப்பு பிஎட், பிற கல்வித்தகுதி உள்ள சிறப்பாசிரியர்களுக்கு இந்த நடைமுறை அமல்படுத் தப்படவில்லை. மாற்றுத்திறன்மாணவர்கள் போலவே சிறப் பாசிரியர்கள் தங்கள் நிலை யை வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு பிஎட் ஆசிரியர் நிரந்தரப் பணியிடம் உருவாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சிறப்பாசிரியர்களை பள்ளியில் இணைத்து, மாற்றுத்திறன் கல்வியை நடைமு றைப்படுத்த வேண்டும் என 9.4.2015-ம் தேதி நடைபெற்ற ஐ.இ. ஒருங்கிணைப்பாளர்களின் மீளாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவ்வாறு சிறப்பாசிரியர்களை பள்ளிகளில் இணைக்கப்படும் நிலையில், சிறப்பு பிஎட் பட்டதாரி சிறப்பாசிரியர்களுக்கும், பட்டய சிறப்பாசிரியர்களுக்கும் பள்ளி கல்வித் துறை மூலம் பணி நியமன ஆணை மற்றும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தற்போதைய நிலை தொடர வேண்டும் எனக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...