புதுக்கோட்டை
காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர்
தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக
பணிபுரிந்தார். இந்த பள்ளி தலைமையாசிாியர் மதிவாணன், புவனேஸ்வரிக்கு
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த
ஆசிாியை கடந்த 7ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து
கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த
நிலையில், தலைமையாசிரியர் மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
புவனேஸ்வரியின் கணவர் வீராசாமி மற்றும் தெற்கு ராயபட்டியை சேர்ந்த 50க்கும்
மேற்பட்ட மக்கள் நேற்று எஸ்பி அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். பின் எஸ்பி உமா, மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர் அருள்முருகன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இதுபற்றி கணேஷ்நகர்
போலீசார், தலைமையாசிரியரிடம் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
ஆசிரியை
புவனேஸ்வரி சாவிற்கு காரணமான தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என புகார் மனு கொடுக்க புதுக்கோட்டை சிஇஓ அலுவலகம் வந்த
புவனேஸ்வரியின் கணவர் வீராசாமி மற்றும் உறவினர்கள் மதிய உணவுக்கு பிறகு
அலுவலகத்திற்கு வந்த சிஇஓ அருள்முருகனின் காலில் விழுந்து கதறியதால்
பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...