Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்ஜி., கல்லூரி விவரங்கள் வெளியீடு: 'கட் - ஆப்' வரிசை பட்டியல் இன்று வெளியாகும்

       அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லூரி பாட விவரங்கள் மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளின் கடந்த ஆண்டு ஜாதி வாரியான, 'கட் - ஆப்' பட்டியல் இன்று வெளியாகிறது.

      அண்ணா பல்கலையின் இணைப்பில், 596 கல்லூரிகள் கடந்த ஆண்டு இணைப்பு பெற்றுள்ளன. இந்த ஆண்டு, மூன்று கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன; 593 கல்லூரிகள் இணைப்பு கேட்டு உள்ளன. பொறியியல், முதல் ஆண்டு சேர்க்கை விண்ணப்ப விற்பனை துவங்கியுள்ள நிலையில், அண்ணா பல்கலை இணைப்புக் கல்லூரிகளின் பெயர் மற்றும் விவரங்களை மாவட்ட வாரியாக, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளின் பாட விவரங்கள், இணைப்பு விவரம், போக்குவரத்து வசதி, விடுதி வசதி, கேன்டீன் வசதி போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த விவரங்களை, https://www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு, 593 கல்லூரிகளில் ஜாதி வாரியாக எவ்வளவு, 'கட் - ஆப்' தேவைப்பட்டது என்ற பட்டியல், இன்று வெளியாகிறது. இப்பட்டியலில், கடந்த ஆண்டு எந்த, கட் - ஆப் மதிப்பெண் வரை, எந்தப் பாடத்துக்கு மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர் என்ற விவரமும் இடம்பெறும். இதன்படி, இந்த ஆண்டு, கட் - ஆப் எண்ணைக் கணக்கிட்டு, கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். மேலும், அண்ணா பல்கலை இணையதளத்தின் பெயரைப் போன்றே, பல போலி இணைய தளங்கள் திடீரென உருவாகியுள்ளன. இத்தளங்களில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, தங்களுக்கு வேண்டிய கல்லூரிகளின் பட்டியல்களை தர வரிசைப் படுத்தி, 'கட் - ஆப்' மதிப்பெண்களை மாற்றிப் போட்டு, தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது,''பெற்றோர், மாணவ, மாணவியர், போலி இணையதளங்களில் கல்லூரி விவரங்களை எடுத்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சரியான தகவல்களைப் பெற, அண்ணா பல்கலையின் நேரடி மாணவர் சேர்க்கை இணையதளத்தைப் பார்க்க வேண்டும். அதில், கல்லூரிகளின் உண்மையான விவரங்கள் இடம் பெறும்,''என்றார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive