பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள்
குறித்து புகார் அளிக்க சென்னையில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள்
குழுக்கள் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி
அறிவுறுத்தினார்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார்
நிறுவன அலுவலகங்களில் பணியிடப் பெண் உயர் அலுவலரின் தலைமையில் புகார் குழு
ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் சமூக பணியில் அனுபவம் அல்லது சட்ட
அறிவு பெற்ற பணியாளர்கள் இருவரும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும்
உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
இதுதவிர, மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டோர் மகளிராக இருத்தல்
வேண்டும். அந்த நிறுவன அலுவலகத்தில் பணிபுரியும் மகளிருக்கு ஏதேனும்
பாலியல் ரீதியான துன்புறுத்தல் இருப்பின், சம்பந்தப்பட்டவர்கள் புகார்
குழுவிடம் புகார் அளிக்கலாம்.
இந்தக் குழுவானது தாங்கள் பெற்ற புகார் மீது விரிவான விசாரணை நடத்தி, உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
மேலும், புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காலாண்டுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
அலுவலக தலைவர் மீதோ அல்லது 10-க்கும் குறைவான நபர்கள் பணிபுரியும்
இடங்களிலோ புகார் எழும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார்
குழுவிடம் புகார் அளிக்கலாம்.
மேலும் ஒவ்வொரு அலுவலகத்தின் தலைவரும், புகார் குழு அமைக்கப்பட்டுள்ள
விவரத்தினையும், மகளிருக்கு ஏதேனும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்
அளித்தால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்த விவரத்தையும் தகவல் பலகையில்
அறிவிப்பு செய்ய வேண்டும்.
எனவே சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் நிறுவன அலுவலகங்களில் புகார்
குழு அமைத்து, அந்த விவரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூக
நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...