"கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன,” என அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.
ராமநாதபுரம்
செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப
கருத்தரங்கில் அவர் பேசியதாவது: பொறியியல் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில்
தகவல் தொழில்நுட்ப துறையில் (ஐ.டி., ) பணிபுரிய விரும்புகின்றனர். ஆனால்,
இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகள் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு
பெறும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நதிகள்
இணைப்பு, விவசாய உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் துறைகளுக்கு முக்கியத்துவம்
தர வேண்டும். கட்டட துறை, நவீன இயந்திரங்கள் தயாரிப்பு போன்ற துறைகளில்
புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்த
வேண்டும்.
புதிய உயர் கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்களை ஆராய்ச்சி
மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஊக்கப்படுத்த வேண்டும். இந்தியாவில்
அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் பொறியியல் படித்த மாணவர்களுக்கு
வேலைவாய்ப்பு உள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தில் 21 துறைகளின் உற்பத்தி சார்ந்த தொழில்கள் வர உள்ளன. படித்த இளைஞர்கள் மற்றும் முனைவோருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதி ஒதுக்கி மானியம் வழங்க வேண்டும். வரும் 2020 ல் இந்தியா 300 பில்லியன் டாலர் அளவிற்கு எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதேபோல், 2050ல் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை ஏற்படும். இதற்கு மாற்றாக 'சோலார்', அணுசக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் உற்பத்தியில் முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...