சேலம்
மாவட்டம், தம்மம்பட்டி அருகேயுள்ள உலிபுரம் ஊராட்சிக்குள்பட்ட
மூக்காகவுண்டன்புதூர். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை
இரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கு அலுவலக பயன்பாட்டுக்கு வைத்திருந்த
இரு மடிக்கணினிகளை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து
பள்ளித் தலைமை ஆசிரியர் லட்சுமி தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார்
அளித்தார். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில் அதே
பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் மீது போலீஸாருக்கு சந்தேகம்
ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவரின் வீட்டில் போலீஸார் ஆய்வு
நடத்தியபோது, பள்ளியில் திருடப்பட்ட இரு மடிக்கணினிகள், 20-க்கும் மேற்பட்ட
செல்லிடப்பேசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து
அந்த மாணவன் கிஷோர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரை போலீஸார்
கைது செய்து சேலத்தில் உள்ள கூர்நோக்கு மையத்தில் சேர்த்தனர். இரு
மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்த செல்பேசிகள்
எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...