பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
கிடைக்கப் பெறாதவர்கள், அவற்றை தனியாகவும் அனுப்பலாம் என அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த
கோரிக்கையைத் தொடர்ந்து இந்தச் சலுகையை பல்கலைக்கழகம் அளித்துள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (மே
29) கடைசியாகும். இந்த நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்
செய்வதிலும், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவர் சான்றிதழ்
பெறுவதிலும் தாமதம் ஏற்படுவதால் பி.இ. விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்தச் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், நிறைவு செய்த
விண்ணப்பத்தை மட்டும் வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பித்தால் போதுமானது.
பின்னர், இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்ற உடன்,
சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடுவதற்கு (15-06-2015) முன்னதாக தபால்
மூலம் அனுப்ப வேண்டியது அவசியமாகும்.
அவ்வாறு அனுப்பும்போது, கடிதத்தில் பொறியியல் சேர்க்கை விண்ணப்ப எண்ணைக்
குறிப்பிட்டு, சான்றிதழ்களை இணைத்து "செயலர், தமிழ்நாடு பொறியியல்
சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025' என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...