முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சமீபத்தில் வெளிவந்துள்ள பிளஸ்–2 பொதுத் தேர்வு முடிவுகள் புதுவையில் தேர்ச்சி சதவீதம் சென்ற ஆண்டைவிட குறைந்திருப்பதை காட்டுகிறது.
காரைக்காலில் தேர்ச்சி விகிதம் புதுவையின்
விகிதத்தைவிட குறைவாக உள்ளது. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.46
ஆக இருக்கும்போது அரசு பள்ளிகளின் விகிதம் 77.49 ஆக உள்ளது.
இந்த நிலையியில் முதல்–அமைச்சர் சென்ற ஆண்டு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்–2 வகுப்பிற்கு பாடம் எடுத்த அனைத்து
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அரசு
பள்ளிகளின் இந்த நிலைக்கு உண்மையான காரணங்கள் என்ன என்பதை கண்டறிந்து
அவர்கள் கூறும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது எந்தவித
விருப்பு வெறுப்புமின்றி நல்ல தரமுள்ள ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
பதவி உயர்விலும் சரியான முறை கடைபிடிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால்
நியமன விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
திறமையான, ஊக்கமுள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பிளஸ்–2 வகுப்புகளுக்கு
பாடம் நடத்த நியமிக்க வேண்டும். நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுக்கும்
ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டும். ரொக்கப்பரிசுகள், நல்லாசிரியர்
விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
மேல்நிலை கல்வியில் மாணவர்கள் வெற்றி பெற
வேண்டுமெனில் ஒன்றிலிருந்து 5–ம் வகுப்பு வரை உள்ள படிப்பு வலுவாக இருக்க
வேண்டும். புதிய பாடத்திட்டங்களையும் போதனை முறைகளையும், மதிப்பீட்டு
முறைகளையும் அரசு செயல்படுத்த வேண்டும். புதுவைக்கென்று ஒரு தனி
மேல்நிலைக்கல்வி வாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...