பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ கல்வி பயில வசதியாக சென்னை லிம்ரா
எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம், மே 3ம் தேதி, தமிழகத்தில் 16 பள்ளி
மையங்களில், மருத்துவக் கல்வி திறனறிதல் தேர்வை பிற்பகல் 2.30 முதல் 4.30
வரை நடத்துகிறது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நேரே தேர்வு நடைபெறும்
மையத்திற்கு, ஒரு மணி நேரம் முன்னதாக சென்று, தங்களை பற்றிய விபரங்களை
பதிவு செய்து, பின்னர் தேர்வு எழுதலாம். எந்த கட்டணமும் செலுத்த
வேண்டியதில்லை.
இவர்கள், தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, பிளஸ் 2 ஹால்
டிக்கட் நகல் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் உடன் கொண்டு
செல்ல வேண்டும். அனைத்திந்திய நுழைவுத் தேர்வு மாதிரியில், 120
கேள்விகளுக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதில் அளிக்க வேண்டும்.
இத்தேர்வில் முதல் 10 மதிப்பெண் பெறுபவர்களுக்கு, விருது, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...