புனேயிலுள்ள ராணுவ மருத்துவக்கல்லூரியில் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம்
ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் இந்திய ராணுவ மருத்துவமனைகளில் டாக்டராக
பணியமர்த்தப்படுவர்.
எம்பிபிஎஸ். கால அளவு:4½ வருடம் படிப்பு மற்றும் ஒரு வருடம் பயிற்சி (internship).
மொத்த இடங்கள்:
130. ஆண்கள்-105. பெண்கள்-25.
தகுதி:
இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிளஸ் 2
பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று முதல் முயற்சியிலேயே
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல். உயிரியல்
பாடங்கள் அடங்கிய பி.எஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி.
வயது:
பிளஸ் 2 விண்ணப்பதாரர்கள் 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் CBSE ஆல் அகில இந்திய அளவில் நடத்தப்படும்
AIPMT-2015 நுழைவுத்தேர்வின் அடிப்படையில் படிப்புக்கு தேர்வு
செய்யப்படுவர்.
AIPMT தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.afmc.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
AIPMT-2015 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டுமே புனே ராணுவ
மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.250/- இதை ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தவும். இதற்கான செலானை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.
www.afmc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
கட்டணம் செலுத்த கடைசி நாள்: 26.5.2015
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:18.05.2015.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...